Enter your Email Address to subscribe to our newsletters

மிர்சாபூர், 23 ஏப்ரல் (ஹி.ச.)
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பயங்கர சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிர்சாபூர் நகரின் திராமந்த்கஞ்ச் வேலி பகுதியில் உள்ள பைசோத் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.
அப்பகுதியில் சென்ற லாரி ஒன்று திடீரென பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து முன் சென்ற வாகனங்கள் மீது மோதியது.
அதன் பின்னர் வேகமாக சென்ற அந்த லாரி, மேலும் ஒரு லாரியிலும் மோதியது. இந்த விபத்தில், இரண்டு லாரிகளுக்கிடையில் சிக்கிய கார் கடுமையாக சேதமடைந்தது.
மேலும், மற்றொரு கார் தீப்பற்றி எரிந்தது.
இந்த தொடர் விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA