யாராலும் தடுக்க முடியாது என சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஷால்
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற வாக்குப்பதிவில் நடிகர் விஷால் சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் என்பதற்கு இ
Vish


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற வாக்குப்பதிவில் நடிகர் விஷால் சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் என்பதற்கு இன்றைய நாள் மிகவும் முக்கியமானது.

வெயில் இருந்தாலும் மக்கள் அனைவரும் வாக்களிக்க வர வேண்டும். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்” என்று கூறினார்.

மேலும், அரசியல்வாதிகள் தங்கள் பணியை சரியாக செய்திருந்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள். அவர்கள் கடமையை செய்யாததால் தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என விமர்சித்தார்.

அண்ணாநகர் தொகுதியில் சாலை மற்றும் சுத்தம் போன்ற அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதன்முறை வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் அரசியலில் பங்களிப்பு அளிப்பேன் என்றும் கூறினார்.

மாற்றம் வேண்டும் என்று மக்கள் ஆசைப்பட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ