பேருந்துகள் இல்லாமல் வாக்காளர்கள் அவதி – வி.கே. சசிகலா கடும் கண்டனம்
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் நேற்று இரவு முதல் இயக்கப்படாததால், வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலைய
Sasikala


Nn


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் நேற்று இரவு முதல் இயக்கப்படாததால், வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேருந்து வசதி இல்லாமல் சிக்கித் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாமல் பயணிகள் பரிதவித்துள்ளனர்.

அதே போன்று திண்டுக்கல் பேருந்து நிலையத்திலும் வாக்களிக்க செல்ல பேருந்துகள் இல்லாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வி.கே. சசிகலா தனது எக்ஸ் (X) தள பதிவில்,

தேர்தல் நாளில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்காததை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமையான வாக்களிப்பை தடுக்கும் வகையில் அரசு செயல்படுகிறது என்ற சந்தேகம் எழுகிறது. வாக்குப்பதிவு அதிகரிப்பதை தடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றனவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திமுக தலைமையிலான அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், தமிழக வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ