Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 23 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 152 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன. சில இடங்களில் வாக்காளர்கள் தாக்கப்பட்டனர். என்றாலும், விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகி வருகின்றன.
142 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 29-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கொல்கத்தா சால்ட் லேக்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்றார் அங்கு 2-ம் கட்ட தேர்தலுக்கான கட்சியின் உத்தி குறித்து சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், மேற்குவங்கத்தில் பாஜகவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது எனத் தெரிவித்த நிதின் நபின், வெறும் மூன்று இடங்களில் வென்றிருந்த பாஜக கடந்த தேர்தலில் 77 இடங்களில் வென்றது.
இதே வேகத்தில் பாஜக பயணிக்கும்போது, நிச்சயம் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P