இளைஞர்கள் காட்டும் ஆர்வத்தை பாராட்டுகிறேன் - வாக்குப்பதிவிற்கு பின் சிதம்பரம் பேட்டி
காரைக்குடி , 23 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்திய தேசிய காங்கிரஸ், தேமுதிக, விசிக ஆகிய கட்சிகள் அடங்கிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்ட
இளைஞர்கள் காட்டும் ஆர்வத்தை பாராட்டுகிறேன் - வாக்குப்பதிவிற்கு பின் சிதம்பரம் பேட்டி


காரைக்குடி , 23 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இந்திய தேசிய காங்கிரஸ், தேமுதிக, விசிக ஆகிய கட்சிகள் அடங்கிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ள அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே பிரதான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் கூறியதாவது,

இந்த முறை இளைஞர்கள் காட்டும் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். அவர்கள் வாக்களிக்க வேண்டும் என நம்புகிறேன்.

ஆனால், நிலையான அரசு, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்காக வாக்களிக்க வேண்டும். கற்பனையான யோசனைகளுக்கு வாக்களிக்க முடியாது.

கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு நிலையான ஆட்சி, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. அதை அவர்கள் தொடர்ந்து வழங்குவார்கள் என நம்புகிறேன்

அவர்கள் தொடர்ந்து வழங்குவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

இளைஞர்கள் மதச்சார்பின்மை மற்றும் முன்னேற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b