உளுந்தூர்பேட்டையில் பேருந்து இல்லாமல் அவதி – அரசு பேருந்துகள் சிறைபிடித்து பயணிகள் போராட்டம்
உளுந்தூர்பேட்டை, 24 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நேற்று நடைபெற்றது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்தனர். வாக்களித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்புவதற்காக, விழுப்
போராட்டம்


உளுந்தூர்பேட்டை, 24 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நேற்று நடைபெற்றது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்தனர்.

வாக்களித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்புவதற்காக, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் பேருந்துகள் வராததால், விடிய விடிய காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்தனர்.

இதனால், அவ்வழியாக வந்த அரசு பேருந்துகளை பயணிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓட்டுநர்களுடன் வாக்குவாதமும் ஏற்பட்டதால், சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பேருந்துகள் இயக்கம் பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாற்று பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, பயணிகள் போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளை விடுவித்தனர்.

அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam