Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக சட்டசபைக்கான தேர்தல் நேற்று (ஏப்ரல் 23) 234 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது. இதில், இதுவரை இல்லாத அளவாக முதன்முறையாக எண்பது சதவீதத்தை தாண்டி, 85.03 சதவீத ஓட்டுகள் பதிவாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிட்ட சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு கழக வேட்பாளர்கள் மற்றும் அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி கழக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தேர்தல் கள நிலவரம் தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கும் நிலையில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திyயுள்ளார். இந்த ஆலோசனையின்போது முதல்வர் அவர்களிடம், தேர்தல் களம் குறித்து கேட்டறிந்ததாகத் தெரிகிறது.
Hindusthan Samachar / vidya.b