சென்னை - திருநெல்வேலி இடையே நாளை முன்பதிவில்லாத சிறப்பு மெமு இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச.) பள்ளி மாணவர்களுக்கான கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, சென்னை மற்றும் நெல்லை இடையே நாளை (ஏப்ரல் 25) முன்பதிவில்லாத சிறப்பு மெமு (MEMU) எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே
சென்னை - திருநெல்வேலி இடையே நாளை முன்பதிவில்லாத சிறப்பு மெமு இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச.)

பள்ளி மாணவர்களுக்கான கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, சென்னை மற்றும் நெல்லை இடையே நாளை (ஏப்ரல் 25) முன்பதிவில்லாத சிறப்பு மெமு (MEMU) எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தச் சிறப்பு ரயில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஏப்ரல் 25) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

அதேபோல், மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஏப்ரல் 26-ம் தேதி மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெற்கு ரயில்வேயின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b