Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 24 ஏப்ரல் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழாயொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்துக்கு முன் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தொடர்ந்து மலைக்கோயிலிலிருந்து உற்சவ மண்டபத்துக்கு சுப்பிரமணியசுவாமி எழுந்தருளினர். இதையடுத்து விழா நாள்களில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 2 ஆம் தேதி திருத்தேரோட்டம், நடைபெறுகிறது. 3 ஆம் தேதி வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா காவிரியில் தீர்த்தவாரியம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்களுடன் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b