Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை ,24 ஏப்ரல் (ஹி.ச.)
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.
மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் வெளிப்படுத்தி சதம் அடித்து 101 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ருத்ராஜ் 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.
208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது.
டி காக் (7), மலேவர் (0), நமன் திர் (0) ஆகியோர் விரைவில் வெளியேறினர்.
பின்னர் திலக் வருமா (37), சூரியகுமார் யாதவ் (36) போராடினாலும், சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை.
கேப்டன் ஹாட்ரிக் பாண்டியா 1 ரன்னில் அவுட்டானார்.
இதன் பின்னர் மும்பை அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து, 19 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் சென்னை அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
சென்னை அணியில் அகேல் ஹோசின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA