Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச)
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதல் வெப்ப அலை வீசுவதால் வீடுகளில் இருக்கும் ஏசி, மின் விசிறி, டிவி, ஃபிர்ஜ் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
அதன்படி, நடப்பாண்டில் இம்மாதம் மின்சார தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
கத்திரி வெயில் தாக்கம் தொடங்காத நிலையில் மின் தேவைகள் உருவாகி உள்ளது இது வாரியத்திற்கு ஒரு சவாலானது தான். காரணம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மின் விசிறி, ஏசி, கூலர் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மின் தேவை என்பது இயல்பாகவே அதிகரிக்கும்.
அதனை சமாளிக்க தான் பல்வேறு வழிகளில் மாநிலத்தில் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதில் மின்வாரியம் முனைப்பு காட்டுகிறது.
நிலக்கரி எரிபொருள் மட்டுமின்றி சூரிய சக்தியையை பயன்படுத்தி மின்சார தயாரிப்பை முடுக்கி விட்டுள்ளோம்.
இதுதவிர, சூரிய மின் சக்தி, காற்றாலை போன்வற்றில் இருந்தும் மின்சார தேவை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும், கோடைகாலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களும் சிக்கனமாக மின்சாரத்தை கையாளும் பட்சத்தின் மின்வெட்டு பிரச்சனை என்பது இருக்காது அதனையும் விழிப்புணர்வாக நுகர்வோரிடம் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.
குறிப்பாக கடந்த ஏப்ரல் 21ம் தேதி மின்சார பயன்பாடு 462.38 மில்லியன் யூனிட்களாக இருந்தது. அதில் தமிழக மின்சார வாரியத்தின் நடவடிக்கையால் நிலக்கரி, எரிவாயு, ஹைட்ரோ பிளாண்ட்கள் மூலம் 77 மில்லியன் யூனிட்கள் கிடைத்தன.
மத்திய பவர் பிளாண்ட்கள் மூலம் 127 மில்லியன் யூனிட்கள் பெறப்பட்டன. எஞ்சிய 86.5 மில்லியன் யூனிட்கள் வெளி சந்தையில் குறுகிய மற்றும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்பட்டவையாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b