காதலால் கர்ப்பம்- கழிவறையில் குழந்தை பெற்று கொலை...!
பெங்களூரு , 24 ஏப்ரல் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தேவனஹள்ளி தாலுகா விஸ்வநாதபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பீரசந்திரா பகுதியில் செயல்பட்டு வரும் ஐபோன் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்நிறுவனத்த
K


பெங்களூரு , 24 ஏப்ரல் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தேவனஹள்ளி தாலுகா விஸ்வநாதபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பீரசந்திரா பகுதியில் செயல்பட்டு வரும் ஐபோன் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அந்நிறுவனத்தின் கழிவறையில் உள்ள கப்பை தொட்டியில் பச்சிளம் சிசுவின் உடல் கிடந்தது.

கழிவறைக்கு சென்ற பெண் ஒருவர் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பின்னர் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற விஸ்வநாதபுரா போலீசார், சிசுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், அதே கழிவறையிலேயே பிரசவம் நடைபெற்றிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

பின்னர் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ரேணுகா என்ற இளம்பெண் கடைசியாக அந்த கழிவறைக்கு சென்றது கண்டுபிடித்தனர்.

உடனே அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், திருமணம் ஆகாத ரேணுகா தனது காதலனால் கர்ப்பமாகி இருந்தது தெரியவந்தது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு வேலை செய்த இடத்திலேயே திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், கழிவறைக்கு சென்று குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

திடீரென குழந்தை பிறந்ததால் பதற்றமடைந்த அவர், பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, உடலை குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.

பின்னர் கழிவறையில் இருந்த ரத்தத்தையும் சுத்தம் செய்து, எதுவும் நடக்காதது போல நடந்துகொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ரேணுகாவை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் நலம் சீரானதும், கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்?

குழந்தையை கொன்றதற்கான காரணம் என்ன? என்பது குறித்து மேலதிக விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA