மத அரசியல் தோல்வியடையும்,தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள் – எம்பி சு. வெங்கடேசன்
சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச) தமிழக தேர்தலில் பா.ஜ.க. மத அடிப்படையிலான பிரச்சாரத்தை முன்னெடுத்ததாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை முன்வ
Suve


Nn


சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக தேர்தலில் பா.ஜ.க. மத அடிப்படையிலான பிரச்சாரத்தை முன்னெடுத்ததாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

10 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை முன்வைத்து வாக்கு கேட்க முடியாத பா.ஜ.க.மக்களை மத அடிப்படையில் பிரிக்கும் சூழ்ச்சியையே தேர்தல் பிரச்சாரமாக மாற்றியுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக தீர்வு காணப்படாத தொகுதி மறுவரையறை சிக்கலை, பெண்களுக்கான இடஒதுக்கீட்டுடன் இணைத்து அவசரமாக சட்டமாக்க முயன்றது.

இது தேர்தல் வெற்றியை மட்டுமே குறிவைத்து தென் மாநிலங்களை வஞ்சிக்கும் முயற்சி.

இந்த முயற்சியை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தி, மசோதாவை தோற்கடித்தோம்.

இந்தியாவின் மதச்சார்பின்மையை குலைக்கும் முயற்சியையும் தடுத்து நிறுத்தியுள்ளோம்.

இறுதியாக, தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலும் தேசிய ஜனநாயக கூட்டணியை மே 4ஆம் தேதி மக்கள் தோற்கடிப்பார்கள்” என சு. வெங்கடேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ