முரசொலி செல்வம் பிறந்தநாள் “என் வாழ்க்கையின் வழிகாட்டி” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்
சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச) முரசொலி செல்வம் பிறந்தநாள்: “என் வாழ்க்கையின் வழிகாட்டி” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம். திராவிட இயக்கத்தின் முக்கிய முன்னோடிகளில் ஒருவரான முரசொலி செல்வத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Nn


சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச)

முரசொலி செல்வம் பிறந்தநாள்: “என் வாழ்க்கையின் வழிகாட்டி” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்.

திராவிட இயக்கத்தின் முக்கிய முன்னோடிகளில் ஒருவரான முரசொலி செல்வத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை நினைவுகூர்ந்து உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தலைவர் கலைஞரின் நிழலில் வளர்ந்து, எனக்கு நிழலாய் இருந்தவர் அண்ணன் முரசொலி செல்வம். பதவிகளையும் விளம்பரங்களையும் விரும்பாதவர். அதிகாரத்தை எதிர்த்து அஞ்சாத மனப்பக்குவம் கொண்டவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “எழுத்தாற்றலால் எதிரிகளை சிக்கவைத்தவர். என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அண்ணனாக இருந்து வழிகாட்டியவர் முரசொலி செல்வம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, முரசொலி செல்வத்தின் நினைவுகளைப் போற்றுவதாகவும், அவரது பங்களிப்புகள் திராவிட இயக்கத்தில் என்றும் நிலைத்து நிற்கும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ