பெண்களுக்கு மசூதியில் தொழுகைக்கு தடை இல்லை - சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் தகவல்
புதுடெல்லி , 24 ஏப்ரல் (ஹி.ச.) பெண்கள் மசூதிகளுக்குள் நுழைந்து தொழுகை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் (AIMPLB), சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வில் தெரிவித்தது. வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு எத
A


புதுடெல்லி , 24 ஏப்ரல் (ஹி.ச.)

பெண்கள் மசூதிகளுக்குள் நுழைந்து தொழுகை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் (AIMPLB), சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வில் தெரிவித்தது.

வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளன.

இதனுடன், சபரிமலை உள்ளிட்ட வழக்குகளும் ஒரே அமர்வில் பரிசீலிக்கப்படுகின்றன.

இந்த வழக்கில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் சார்பில் மூத்த வக்கீல் சம்ஷாத் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அவர் கூறுகையில்,

இஸ்லாமில் பெண்கள் மசூதிக்கு செல்வதைத் தடுக்கவில்லை.

அனைத்து பிரிவுகளிலும், சில ஒழுங்கு முறைகளை பின்பற்றி பெண்கள் மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மசூதிகளில் கருவறை போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை” ம என்றார்.

மேலும், பெண்கள் மசூதிக்கு செல்ல அனுமதி இருந்தாலும், அவர்கள் வீட்டிலேயே தொழுவது சிறந்ததாக கருதப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் நீதிபதி ஒருவர்,

ஒரே வீட்டில் உள்ள அனைவரும் மசூதிக்கு சென்றால், குழந்தைகளை யார் கவனிப்பார்கள்?

என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வக்கீல் சம்ஷாத்,

அத்தியாவசிய மத நடைமுறை (ERP) கோட்பாடு இஸ்லாமிய வழக்கங்களில் நீதிமன்றங்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், இஸ்லாம் என்பது செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும் குறித்து விரிவாக விளக்கும் ஆழமான மார்க்கம் என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA