Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 24 ஏப்ரல் (ஹி.ச)
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் பென்னிக்ஸ் என்ற தந்தை, மகன் இருவரும் காவல் நிலைய விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டபோது 2020 ஜூன் 19ஆம் தேதி காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்டங்களாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஒன்பது காவலர்களுக்கு கடந்த மாதம் ஆறாம் தேதி இரட்டை தூக்கு தண்டனையை அறிவித்து மதுரை மாவட்ட நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டிருந்தார்.
விசாரணை நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அறிவித்தால் அதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ மற்றும் அரசு தரப்பில் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மத்திய சிறையில் இருந்து குற்றவாளிகளின் என அறிவிக்கப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் காணொளி வாயிலாக ஆஜர் படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதிகள் உங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதிப்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் தரப்பில் மேல்முறையீடு தாக்கல் செய்ய செய்கிறீர்களா? என கேள்வி எழுப்பினர்.
மேலும் மேல்முறையீடு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / vidya.b