விஜய்யுடன் கூட்டணி இல்லை - பா.ஜ.க தேசிய தலைவர் நிதின் நபின் உறுதி
புதுடெல்லி, 24 ஏப்ரல் (ஹ.ச.) பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவரிடம்,5 மாநில சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:–
T


புதுடெல்லி, 24 ஏப்ரல் (ஹ.ச.)

பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் அவரிடம்,5 மாநில சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:–

5 மாநிலங்களிலும் தேர்தல் சூழ்நிலை மாறுபட்டிருந்தாலும், பா.ஜ.க.க்கு சாதகமான நிலை காணப்படுகிறது.

அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் மீண்டும் பா.ஜ.க. அரசு அமைவது உறுதி.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆச்சரியமான முடிவு வெளியாகும்.

அங்கு முதல்முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைப்பது 100 சதவீதம் உறுதி.

மக்களின் மனநிலையை பார்த்தால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வெற்றி பெறும்.

அந்த கூட்டணிக்கு அ.தி.மு.க. தலைமை தாங்குகிறது.

ஆளும் தி.மு.க அரசின் ஊழல், அராஜகம், சனாதன எதிர்ப்பு போன்றவற்றுக்கு எதிராக மக்கள் மனநிலை காணப்படுகிறது.

தி.மு.க.வுக்கு எதிரான அலை உருவாகி வருவது தெளிவாக தெரிகிறது.

இந்த தேர்தலில் அந்தக் கட்சிக்கு கணிசமான பின்னடைவு ஏற்படும்.

நடிகர் விஜய் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார்.

புதியவர் உடனடியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. தேர்தலுக்கு பிறகு அவருடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.

எங்கள் கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தனித்தே ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA