Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 24 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக அமைதியாக நடைபெற்று நிறைவடைந்தது.
இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் சுமார் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தல் காலத்தில் அமலில் இருந்த நடத்தை விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
மேலும், வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் தொடர்பான தகவல்கள் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு தேவையில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இம்மையங்களில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் இணைந்து மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam