தென்காசியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் அறையில் பாதுகாப்பு குறைபாடு
தென்காசி, 24 ஏப்ரல் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தென்காசி மாவட்டத்தில் உள்ள கொடி குறிச்சி ஸ்ரீ ராம் நல்ல மணி யாதவ கல்வி நிறுவனத்தில் பாதுகாப
Polling Machines


தென்காசி, 24 ஏப்ரல் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தென்காசி மாவட்டத்தில் உள்ள கொடி குறிச்சி ஸ்ரீ ராம் நல்ல மணி யாதவ கல்வி நிறுவனத்தில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வரும் நிலையில், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஆலங்குளம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் தனித்தனியாக அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்திருந்த அறையின் ஒரு பகுதியானது பாதுகாப்பு இல்லாத சூழலில் இருப்பதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில், பாதுகாப்பு இல்லாததாக கருதப்படும் அந்த பகுதியை இரும்பு கேட்டு வைத்து அடைக்கவும், அந்த பகுதியில் கூடுதலாக சிசிடிவி கேமராக்களை பொருத்தி எப்பொழுதும் அந்த பகுதியில் காவலர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக தற்போது தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பான அறையில் வைத்து சிலீட காலதாமதம் ஆகி வருகிறது.

மேலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் வாக்கு எண்ணிக்கையின் போது அரசியல் கட்சியின் பயன்படுத்தப்பட வேண்டிய விதிமுறைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய வேண்டிய வழிகள் உள்ளிட்டவைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு ப்ளூ பிரிண்ட் மூலம் விளக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN