காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைத்துள்ள அறையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு
காஞ்சிபுரம், 24 ஏப்ரல் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்பட 5 லட்சத்து 85 ஆயிரத்து 274 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 22 ஆயிரத்து 279 பெண் வாக்காளர்களும், 204
Three-tier security


காஞ்சிபுரம், 24 ஏப்ரல் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்பட 5 லட்சத்து 85 ஆயிரத்து 274 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 22 ஆயிரத்து 279 பெண் வாக்காளர்களும், 204 மூன்றாம் பாலினத்தவரும் என 12 லட்சத்து 7 ஆயிரத்து 757 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10,54,274 வாக்களித்துள்ளனர்.

ஆலந்தூர் தொகுதியில் 431 வாக்குச்சாவடிகளும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 446 வாக்குச்சாவடிகளும், உத்திரமேரூர் தொகுதியில் 321 வாக்குச்சாவடிகளும், காஞ்சிபுரம் தொகுதியில் 348 வாக்குச்சாவடிகளும் என 1556 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 84.92 சதவிகிதம் ஓட்டு பதிவாகியுள்ளது. ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் இருந்து நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 3 மணி வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு காஞ்சிபுரம் பொன்னிக்கரையில் உள்ள அண்ணா உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சினேகா தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள், மண்டல அலுவலர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார், மத்திய பாதுகாப்பு ரிசர்வ் படை வீரர்கள் முன்னிலையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல்வைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சுழற்சி முறையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாரிகள், போலீசார், பிஆர்பிஎப் வீரர்கள் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படை 216 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் 80 பேரும், ஓய்வுபெற்ற ராணுவ மற்றும் போலீசார் 456 பேரும், சட்டம்ஒழுங்கு போலீசார் 784 பேர் உட்பட 1536, போலீசார் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Hindusthan Samachar / vidya.b