கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் திரள் – நீண்ட வரிசையில் தரிசனம்
தூத்துக்குடி, 24 ஏப்ரல் (ஹி.ச.) கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், திருச்செந்தூரில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்
திருச்செந்தூர் கோவில்


தூத்துக்குடி, 24 ஏப்ரல் (ஹி.ச.)

கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், திருச்செந்தூரில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் இக்கோவிலுக்கு வழக்கமாகவே ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதுடன், சமீபத்தில் தேர்தல் நிறைவடைந்ததாலும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் அதிகாலையிலேயே கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து குடும்பத்துடன் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக பொது தரிசன வரிசை, ரூ.100 கட்டண தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam