Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான சாதனை வாக்குப்பதிவை முன்னிட்டு, மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் மக்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து,அவர் வெளியிட்ட பதிவில்,
தமிழ்நாட்டில் தேர்தல் எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 84.69 சதவீதம் என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் கடமையை தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிறப்பாக நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பலர் நீண்ட தூரம் பயணம் செய்து வந்து தங்களது வாக்கினைப் பதிவு செய்ததாகவும், வாக்களித்த பின்னர் மீண்டும் தாங்கள் பணியாற்றும் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு வாக்குதானே” என்ற எண்ணம் இல்லாமல், ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது” என்ற பொறுப்புணர்வே மக்களை வாக்களிக்க தூண்டியதாக கூறிய அவர், இத்தகைய பொறுப்புணர்வுடன் செயல்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாடு வாக்களித்துவிட்டது; மே 4 தமிழ்நாடு வெல்லும்” என்றும், “வெல்வோம் ஒன்றாக” என்றும் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P