சென்னையில் வாக்கு சதவீதம் உயர்ந்தாலும் எண்ணிக்கை குறைந்த அதிர்ச்சி
சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாட்டில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தலைநகர் சென்னையில் கடந்த சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இந்த முறை வாக்களித்தவர்களின் மொத்த எண்ணிக்கை குறைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் த
வாக்கு


சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தலைநகர் சென்னையில் கடந்த சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இந்த முறை வாக்களித்தவர்களின் மொத்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 24.33 லட்சம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

அதனைத் தொடர்ந்து, 2021 தேர்தலில் 24.16 லட்சம் வாக்குகள் பதிவானது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் இதுவரை 23.69 லட்சம் வாக்குகளே பதிவாகியுள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR) உள்ளிட்ட நடவடிக்கைகளால் வாக்கு சதவீதம் உயர்ந்திருந்தாலும், மொத்தமாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது, நகர்ப்புற வாக்காளர் பங்கேற்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

வாக்கு சதவீத உயர்வு இருந்தபோதிலும், மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட இந்த சரிவு அரசியல் கட்சிகள் இடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P