Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஏப்ரல் (ஹி ச.)
தேர்தல் வாக்குப்பதிவு நாளை முன்னிட்டு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, பொதுமக்கள் அச்சமின்றி தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற உதவிய காவல்துறையினரை ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
வாக்குப்பதிவு நாளில் காவல்துறையினர் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க தேவையான சூழலை உறுதி செய்வதில் காவல்துறையினர் முக்கிய பங்காற்றியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், வாக்குச்சாவடிகள் சுற்றுவட்டாரங்களில் பலத்த பாதுகாப்பு, ரோந்து பணிகள், போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் தேர்தல் நாள் அமைதியாகவும் சீராகவும் நடைபெற காவல்துறையின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது என கூறினார்.
தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து நிலை காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்த ஆணையர், பொதுமக்களின் பாதுகாப்பையும் ஜனநாயகத்தின் மதிப்பையும் காக்க அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்பும் உறுதிப்பாடும் பாராட்டத்தக்கது என பாராட்டினார்.
Hindusthan Samachar / P YUVARAJ