விழுப்புரத்தில் 3 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு – பொதுமக்கள் அவதி
விழுப்புரம், 24 ஏப்ரல் (ஹி.ச.) விழுப்புரம் நகரில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். விழுப்புரம் நகருக்கு தென்பெண்ணை ஆற்றுப் படுகையில் இருந்து நகராட்சி நிர்வாகம் மூலம் வழக்க
குடிநீர்


விழுப்புரம், 24 ஏப்ரல் (ஹி.ச.)

விழுப்புரம் நகரில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

விழுப்புரம் நகருக்கு தென்பெண்ணை ஆற்றுப் படுகையில் இருந்து நகராட்சி நிர்வாகம் மூலம் வழக்கமாக சீரான குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பெருமாள் கோவில் தெரு, நாயக்கன் தோப்பு, நந்தனார் தெரு, ஜி.ஆர்.பி தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது.

இதற்குக் காரணமாக எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் இருந்து நகரத்திற்கு வரும் முக்கிய குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுது என தெரிவிக்கப்படுகிறது.

பழுதை சரி செய்ய நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால் நகரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்கே தண்ணீர் இல்லாமல் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,

குடிநீர் விநியோகம் தடைபட்டதால் மிகுந்த சிரமம் அனுபவிக்கிறோம். உடனடியாக பழுதை சரி செய்து சீரான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam