Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 24 ஏப்ரல் (ஹி.ச)
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் இன்று
(ஏப்ரல் 24) பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் இந்த இயந்திரங்கள் முத்திரையிடப்பட்டன.
இந்த பாதுகாப்பு நடவடிக்கையை அந்தந்த தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் நேரில் பார்வையிட்டனர். இதில், 213 விளாத்திகுளம் மற்றும் 214 தூத்துக்குடி ஆகிய தொகுதிகளை எலுச்சூரி ரத்னாகர ராவ், 215 திருச்செந்தூர் மற்றும் 216 திருவைகுண்டம் ஆகிய தொகுதிகளை சோடிங்புயீ, 217 ஒட்டப்பிடாரம் தொகுதியை அரவிந்த் குமார் வெர்மா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அனைத்து இயந்திரங்களும் அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b