திருவண்ணாமலை மாவட்டத்தில் 89.66% வாக்குப்பதிவு – மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு
திருவண்ணாமலை, 24 ஏப்ரல் (ஹி.ச.) 2026 சட்டமன்ற பொது தேர்தல் நேற்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. அதன் பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்ட 2517 வாக்குச்சாவடிகளில் 89.66% வாக்குப்பதிவு பதிவாகியுள்
வாக்குப்பெட்டிகள்


திருவண்ணாமலை, 24 ஏப்ரல் (ஹி.ச.)

2026 சட்டமன்ற பொது தேர்தல் நேற்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது.

அதன் பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்ட 2517 வாக்குச்சாவடிகளில் 89.66% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும், கலசப்பாக்கம், செங்கம், கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை–திண்டிவனம் சாலையில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறைகள் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான தர்ப்பகராஜ் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam