Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 25 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் 5 நாட்கள் கொடைக்கானலில் ஓய்வெடுக்க வருகை தந்துள்ளார்.
இதன்படி, முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 25) காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்துடன் புறப்பட்டு மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் பகல் 2.30 மணிக்கு கொடைக்கானலுக்கு வந்தார்.
வழிநெடுகிலும் சாலையோரம் முதல்வரை வரவேற்க நின்றிருந்த தொண்டர்கள், பொதுமக்களுக்கு காரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் கையசைத்தபடி சென்றார்.
சில இடங்களில் அவரை வரவேற்க காத்திருந்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடம் புத்தகங்களை அன்பளிப்பாக பெற்றார். கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அவர் ஓய்வெடுக்கிறார்.
விடுதியில் கட்சியினர் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் வருகையை முன்னிட்டு, கொடைக்கானலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்ரல் 29-ம் தேதி வரை ஓய்வெடுக்கும் முதல்வர் ஏப்ரல் 30-ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளனர்.
எனவே, ஏப்ரல் 30 வரை கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன் கேமரா) பறக்க தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b