Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 25 ஏப்ரல் (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டனி, நாதக, தவெக என நான்கு முனைப் போட்டி நிலவியது.
இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் செல்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் குடும்பத்துடன் இன்று (25.04.2026) மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வரும் போது அவரிடம் செய்தியாளர்கள், சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், சூப்பராக உள்ளது என வெற்றிக்குறியை குறிக்கும் வகை கையை உயர்த்திக் காட்டிக்கொண்டு அங்கிருந்து கடந்து சென்றார்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்புக் கொடுக்க யாரும் வர வேண்டாம் எனக் கூறிய நிலையில் தமிழக முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது சபாநாயகரும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளருமான அப்பாவு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தார்.
மேலும் கொடைக்கானலில் முதல்வர் மு.க. ஸ்டாலின், மூன்று அல்லது நான்கு நாட்கள் ஓய்வெடுப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த கடந்த 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கும் பின்பும், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னரும் கொடைக்கானலுக்குச் சென்று வருவதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b