பேருந்து நிறுத்தத்தில் பெண்ணை அரிவாளால் மிரட்டிய நபர்- போலீஸ் விசாரணை
திண்டுக்கல், 25 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பேருந்து நிறுத்தம் அருகே பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, திண்டுக்கலில் இருந்து அய்யலூருக்
மிரட்டல்


திண்டுக்கல், 25 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பேருந்து நிறுத்தம் அருகே பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, திண்டுக்கலில் இருந்து அய்யலூருக்கு ஒரு குடும்பத்தினர் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

அப்போது பின்னால் அமர்ந்திருந்த வேங்கனூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர், அந்த குடும்பத்தில் உள்ள பெண்களை தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அய்யலூரில் இறங்கிய அந்த குடும்பத்தினரை, குறித்த இளைஞர் பின்தொடர்ந்து சென்று ஆபாசமாக பேசியுள்ளார்.

இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்த பொதுமக்கள் தலையிட்டு அந்த இளைஞரை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வடமதுரை காவல் நிலையம் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் முதல் கட்ட விசாரணை மேற்கொண்டதில், சம்பவத்தில் ஈடுபட்டவர் வேங்கனூரைச் சேர்ந்த இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மதுபோதையில் அரிவாளுடன் மிரட்டிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam