Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 25 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு டாஸ்மாக் பாரில், தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
மேலும், தேர்தல் நாளில் அரசால் விதிக்கப்பட்ட மது விற்பனைத் தடையை அமல்படுத்துவதிலும், சட்டவிரோத விற்பனையைத் தடுக்கவும் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் தவறியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதனுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், இன்ஸ்பெக்டர் திருமுருகனை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
தேர்தல் தடை நாளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது மற்றும் அதனைத் தொடர்ந்து காவல் அதிகாரி மீது எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை, தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam