ஒசூரில் டெலிவரி பிக்அப் வாகனத்தில் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி, 25 ஏப்ரல் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடந்த ஒரு சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட மூக்கண்டப்பள்ளி அருகே உள்ள லால் பேருந்து நிறுத்தம் பகுதியில், ஒரு பிக் அப் டெலிவரி வாகனத்தின் வெ
Death


கிருஷ்ணகிரி, 25 ஏப்ரல் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடந்த ஒரு சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட மூக்கண்டப்பள்ளி அருகே உள்ள லால் பேருந்து நிறுத்தம் பகுதியில், ஒரு பிக் அப் டெலிவரி வாகனத்தின் வெளிப்புறத்தில் அமைந்திருந்த கொக்கியில் நைலான் கயிறு பயன்படுத்தி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலம் காணப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிப்காட் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு மேலான விசாரணை மேற்கொண்டனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் (28) என்பவர் என அடையாளம் காணப்பட்டார்.

அஜய் சொந்தமாக ஒரு பிக் அப் வாகனம் வாங்கி, கொரியர் மற்றும் பார்சல் டெலிவரி பணிகளில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.

வேலை தொடர்பான அழுத்தங்கள் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால் தான் இந்த துயரமான முடிவை எடுத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சடலம் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மனஅழுத்தம் அல்லது குடும்ப பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை பகிர்ந்து ஆலோசனை பெறுவது முக்கியம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN