Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 25 ஏப்ரல் (ஹி.ச.)
ஐபிஎல் 2026 தொடரின் 34-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
பெங்களூருவில் உள்ள எம்.
சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நல்ல தொடக்கத்தை பெற்றது.
பவர்பிளே முடிவில் 57 ரன்கள் எடுத்தது.
சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.
பின்னர் இருவரும் தொடர்ந்து ரன் குவித்த நிலையில், 32 ரன்கள் எடுத்திருந்த கில் அவுட்டானார்.
தொடர்ந்து பட்லர் களமிறங்கி சுதர்சனுடன் இணைந்து ரன் வேகத்தை உயர்த்தினார்.
சாய் சுதர்சன் 57 பந்துகளில் சதம் அடித்து அசத்திய பின்னர் உடனே அவுட்டானார்.
அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி சிக்சர், பவுண்டரிகள் அடித்தார்.
பட்லர் 25 ரன்களில் வெளியேறினார். இறுதியில் ஹோல்டர் அதிரடியாக விளையாட, 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 205 ரன்கள் குவித்தது.
பெங்களூரு தரப்பில் சுயாஷ், ஹேசல்வுட், புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கத்தில் சற்றே பின்னடைவு ஏற்பட்டது. பெத்தேல் 14 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் விராட் கோலி மற்றும் படிக்கல் இணைந்து அணியை முன்னேற்றினர்.
இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தனர். படிக்கல் 55 ரன்களிலும், கோலி 81 ரன்களிலும் அவுட்டானார்.
எனினும் மற்ற வீரர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 18.5 ஓவர்களில் இலக்கை கடந்தனர்.
இதன் மூலம் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA