கல்வராயன் மலையில் கணவன்-மனைவி கொடூரக் கொலை...!காவல்துறை விசாரணை தீவிரம்
கள்ளக்குறிச்சி, 25 ஏப்ரல் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கணவன்-மனைவி இருவர் மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமானம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மற்றும் அவரது மனைவி பொன்னம்ம
கொலை


கள்ளக்குறிச்சி, 25 ஏப்ரல் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கணவன்-மனைவி இருவர் மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருமானம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மற்றும் அவரது மனைவி பொன்னம்மாள் ஆகியோர், தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் வீட்டில் கிடந்துள்ளனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கரியாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரட்டைக் கொலையின் காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொடூரமாக உயிரிழந்த இந்த சம்பவம் கல்வராயன் மலைப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam