சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச இளங்கலை கல்வித் திட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு, 25 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை பல்கலைக்கழகம் 2025–26 கல்வியாண்டிற்கான இலவச இளங்கலை கல்வித் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 2025–26 கல்வியாண்டில் +2 தேர்ச்சி பெற்ற ஏழை மற்றும் எளிய பின்னணியிலுள்ள மாணவர்கள் இலவசமாக இளங்கலை ப
சென்னை பல்கலைக்கழகம்


தமிழ்நாடு, 25 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை பல்கலைக்கழகம் 2025–26 கல்வியாண்டிற்கான இலவச இளங்கலை கல்வித் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 2025–26 கல்வியாண்டில் +2 தேர்ச்சி பெற்ற ஏழை மற்றும் எளிய பின்னணியிலுள்ள மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்பை தொடரும் வாய்ப்பு பெறுகின்றனர்.

மேலும், ஆதரவற்றோர், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் மே 23-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://unom.ac.in� மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி அணுகலை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam