ரூ. 20 கோடி மதிப்பீட்டில் நவீன வழிகாட்டி பலகைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்
சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.) சாலை விபத்துக்களை தடுக்கும் வகையிலும் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வழிகாட்டி பலகைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிற
ரூ. 20 கோடி மதிப்பீட்டில் நவீன வழிகாட்டி பலகைகள் அமைக்க சென்னை  மாநகராட்சி திட்டம்


சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையிலும் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வழிகாட்டி பலகைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் மாநகர எல்லைக்கு உட்பட்ட 300 முக்கிய சாலைகளில் நவீன வழிகாட்டு பலகைகளை அமைக்கப்பட உள்ளது.

அதாவது வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், இந்த வழிகாட்டி பலகைகளில் எழுத்துக்களை விட, படங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த வகையில் விபத்து பகுதிகள், பள்ளி குழந்தைகள் சாலைகளைக் கடக்கக்கூடிய இடங்கள் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளவற்றைப் படங்கள் மூலம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேரங்களில் ஓட்டுநருக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் எதிரொளிப்புத் தன்மை கொண்ட ஸ்டிக்கர்கள் உடன் இந்த பலகை வடிவமைக்கப்பட உள்ளன.

முதற்கட்டமாகப் போக்குவரத்து நெரிசல்கள் அதிகம் காணப்படும் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர், வேளச்சேரி, அண்ணாசாலை மற்றும் பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளின் பெயர்கள் திரையிலும் தோன்றக்கூடிய வகையில் இந்த வழிகாட்டி பலகைகள் நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட உள்ளது.

Hindusthan Samachar / vidya.b