பள்ளி மாணவர்கள் மோதல் - தாக்க முயன்ற மாணவர்கள் 2 பேர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்
நெல்லை, 25 ஏப்ரல் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் நயினார் காலனி பகுதியில் நேற்று காலை சில பள்ளி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், மற்றொரு குழுவைச் சேர்ந்த
மோதல்


நெல்லை, 25 ஏப்ரல் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம்

வீரவநல்லூர் நயினார் காலனி பகுதியில் நேற்று காலை சில பள்ளி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், மற்றொரு குழுவைச் சேர்ந்த மாணவர்களுடன் சண்டையில் ஈடுபட்டதுடன், தங்களது நண்பர்களையும் அழைத்து வந்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கவனித்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களை பிடித்து வைத்தனர்.

பின்னர், பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மாணவர்களை வீரவநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில்,

சக மாணவர்களை தாக்க நண்பர்களை அழைத்து வந்தது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் அனுப்பப்பட்டுள்ளனர்.

சிறுவர்களுக்குள் ஏற்பட்ட சாதாரண விளையாட்டு தகராறு இவ்வாறு பெரிதாக மாறியது மட்டுமின்றி, சமூகத்தில் இன்னும் நிலவி வரும் தீண்டாமை மனப்பான்மையை வெளிப்படுத்தியதாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam