Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 25 ஏப்ரல் (ஹி.ச.)
அரியானா மாநிலத்தை சேர்ந்த ரோஹித் லால் (29), குருகிராம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, புதுடெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, தனது வருங்கால மனைவியை வீட்டிற்கு அழைத்து தனிப்பட்ட நேரம் கழிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக பாலுணர்வை தூண்டும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், ரோஹித் லால் வேலைக்கு வராததால் சந்தேகமடைந்த நண்பர்கள், அவரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றனர்.
நீண்ட நேரமாகியும் பதில் அளிக்காததால், அவரது வீட்டிற்கு சென்றனர்.
ஆனால், கதவு திறக்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரோஹித் லால் படுக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
அவரது அருகில் பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள் சிதறிக் கிடந்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், அதிகளவில் மருந்து உட்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA