Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 25 ஏப்ரல் (ஹி.ச.)
தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்து பா.ஜ.க வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி கட்சியின் இந்த தோல்வி, அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான ராகவ் சத்தா, அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோர் ஒரே நேரத்தில் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தனர்.
இவர்களை தொடர்ந்து, கடந்த 18 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து செயல்பட்டு வந்த சுவாதி மாலிவால், தாமும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேர்மையான அரசியலை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி தற்போது ஊழலின் கூடாரமாக மாறிவிட்டது.
ஊழலை ஒழிக்க வந்த கட்சி இன்று அதிலேயே மூழ்கியுள்ளது என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களும் கட்சியிலிருந்து விலக தீர்மானிக்க முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தொடர் சம்பவங்கள் டெல்லி அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA