Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 25 ஏப்ரல் (ஹி.ச.)
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வின் ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற மே 3ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை நாளை வெளியிடுகிறது.
தமிழகத்தில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் உட்பட, நாடு முழுவதும் 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்கள் தங்களது நுழைவுச்சீட்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட்டில் மாணவர்களின் பெயர், பதிவு எண், தேர்வு தேதி, தேர்வு மையம் மற்றும் அதன் முகவரி, தேர்வு நேரம், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.
தேர்வு எழுத செல்லும் போது ஹால் டிக்கெட்டை கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA