Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச)
புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட 1.680 லிட்டர் மதுபானத்தை வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமயிலூரை சேர்ந்த வல்லரசு, தனது வாகனத்தில் மதுபானம் எடுத்துவந்த போது ஆல் பேட்டை சோதனைச் சாவடியில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி மனுதாரர் நீதிமன்றத்தை அணுகினார்.
மனுவில், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தமிழக அரசின் விதிகளின்படி 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்திருக்க அனுமதி உள்ள நிலையில், தாம் வைத்திருந்தது வெறும் 1.680 லிட்டர் மட்டுமே என்பதால் வழக்கு தொடர முடியாது என்று வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், சொந்த நுகர்வுக்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்திருக்க அனுமதி உள்ள நிலையில், அதற்குக் குறைவாக மதுபானம் வைத்திருந்ததற்காக குற்றவியல் வழக்கு தொடர முடியாது என தெரிவித்தது.
இதனையடுத்து, மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ