Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 25 ஏப்ரல் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் சமீப காலங்களாக தெரு நாய்கள் தொல்லை என்பது தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் புளியங்குடி அருகே உள்ள பாம்பு கோயில் சந்தை, கீழ திருவெட்டநல்லூர், மடத்துப்பட்டி உள்ளிட்ட 3 கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட நபர்களை வெறிநாய் ஒன்று துரத்தி, துரத்தி கடித்துள்ளது.
இதில், படுகாயம் அடைந்த அந்த நபர்கள் தற்போது புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு விரைந்து சென்ற ஊராட்சி நிர்வாகத்தினர் நாயை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இதேபோல் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் தொல்லை என்பது தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருவதால், அதனை கட்டுப்படுத்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN