Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னையில்
ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து ஆர்ஏபுரம் நோக்கி ஒரு பென்ஸ் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
அது செயிண்ட் மேரிஸ் சாலை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு சொகுசு காருடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் இரண்டு கார்களும் கடுமையாக சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஒரு காரை ஓட்டி வந்தவர் மந்தவெளியைச் சேர்ந்த ஸ்ரீகரன் என்றும், அவர் டிராவல்ஸ் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.
மற்றொரு காரை ஓட்டி வந்தவர் கேரளாவைச் சேர்ந்த பிஜோ என்பதும், அவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருவதும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்கு தொடர்பாக போலீசார் அதிவேகமாக வாகனம் ஓட்டிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் மருத்துவர் பிஜோ மதுபோதையில் வாகனம் ஓட்டவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர் மதுபோதையில் இருந்ததாகவும், மாற்று நபரை சோதனைக்கு நிறுத்தி போலீசார் மறைக்க முயற்சிக்கின்றனர் என்றும் புகார்தாரர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ