விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத ஆண் தூக்கில் தொங்கியவாறு மர்மமான முறையில் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி, 25 ஏப்ரல் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் விவசாய வேலை செய்ய விவசாயிகள் காலையில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது செல்வராஜ் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கில்
Sankarapuram Police Station


கள்ளக்குறிச்சி, 25 ஏப்ரல் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் விவசாய வேலை செய்ய விவசாயிகள் காலையில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது செல்வராஜ் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியவாறு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அருகில் உள்ள சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பதும், இவர் இரண்டு நாட்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN