Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 25 ஏப்ரல் (ஹி.ச.)
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கல்லாச்சி பகுதியில், இருசக்கர வாகனத்தின் அடியில் பதுங்கியிருந்த பாம்பிடமிருந்து 17 வயது மாணவர் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லாச்சி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரானிஷ் என்ற மாணவர், தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பொருட்களை எடுக்க வாகனத்தின் அருகே சென்றார்.
அப்போது, தனது கால்சட்டை பையில் இருந்து சாவியை எடுத்து வாகனத்தை அணுகியுள்ளார்.
அந்த நேரத்தில், வாகனத்தின் அடிப்பகுதியில் பதுங்கியிருந்த பாம்பு திடீரென வெளியே வந்து மாணவரை நோக்கி சீறிப்பாய்ந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்துல் ரானிஷ், உடனடியாக சுதாரித்து வேகமாக அங்கிருந்து விலகி ஓடினார்.
இதனால், பாம்பு கடியிலிருந்து அவர் நூலிழையில் தப்பினார்.
இந்த பரபரப்பான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பார்ப்போரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கேரள மாநிலத்தில் அண்மைக்காலமாக பல இடங்களில் பாம்பு கடியால் உயிரிழப்புகள் பதிவாகி வரும் நிலையில், இந்த சம்பவம் பொதுமக்களிடையே கூடுதல் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, வாகனங்களை பயன்படுத்தும் முன் அதன் சுற்றுப்புறம் மற்றும் அடிப்பகுதியை கவனமாக பரிசோதிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் இந்த நிகழ்வு மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P