வாக்குப்பதிவிற்கு சென்றோர் சொந்த ஊர் திரும்ப இன்று முதல் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.) கடந்த 23ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ஜனநாயக கடமையாற்ற சென்ற பொதுமக்கள் சென்னை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு திரும்பும் வகையில் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு
வாக்குப்பதிவிற்கு சென்றோர் சொந்த ஊர் திரும்ப இன்று முதல் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்  - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு


சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)

கடந்த 23ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ஜனநாயக கடமையாற்ற சென்ற பொதுமக்கள் சென்னை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு திரும்பும் வகையில் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது.

தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக இன்றும் (ஏப்ரல் 25) நாளையும் 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேர்தல் முடிந்த பின்னர் இன்று (25/04/2026) மற்றும் நாளை (26/04/2026) ஆகிய நாட்களில் பொதுமக்கள் சிரமமின்றி சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் பயணம் செய்திட ஏதுவாக இன்று தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 பேருந்துகளும் முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

நாளை சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,184 சிறப்பு பேருந்துகளும் பிற ஊர்களுக்கு 3,345 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டுமொத்தமாக 14,508 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று 19,676 பயணிகளும் நாளை

( 26/04/2026) 47,001 பயணிகளும் முன்பதிவு செய்து பயணிக்க உள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b