Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 25 ஏப்ரல் (ஹி.ச.)
கவிதா அறிவித்துள்ள ‘தெலங்கானா ராஷ்ட்ர சேனா’ (டிஆர்எஸ்) குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
தெலங்கானா காங்கிரஸ் ஊடகக்குழு தலைவர் சாமா ராம்மோகன் ரெட்டி, சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
கவிதா அறிவித்த டிஆர்எஸ் தனித்துவமான கட்சி அல்ல. அது பிஆர்எஸ் கட்சிக்கு ‘துணை கட்சி’ மட்டுமே” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “தந்தை கே.சி.ஆரும், மகள் கவிதாவும் ஒரே அரசியல் பாதையில் செயல்படுகின்றனர்.
தந்தை நடத்தும் பிஆர்எஸ் கட்சியின் ஓர் அங்கமே மகள் தொடங்கிய டிஆர்எஸ்.
தலைவும் வாலும் எப்போதும் ஒன்றே. இதெல்லாம் ‘கேஸ்’ மட்டுமே” என்று எள்ளலுடன் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், கவிதா தனது தந்தை கே.சி.ஆரை ‘மாமனிதர்’ என்று குறிப்பிட்டதும்,
முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான ஆட்சியை ‘ஹிட்லர் ஆட்சி’ என விமர்சித்ததும் தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA