Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 25 ஏப்ரல் (ஹி.ச.)
திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முற்றிலுமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் என எதுவும் கிடையாது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
சிசிடிவி கேமராக்களை பொருத்தவரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து அறைகளிலும் பொருத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு வரை இதில் எந்த பிரச்சனையும் இருந்ததாக தெரியவில்லை.
தற்பொழுது சொல்லப்படும் நேர மாறுபாடு குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டேன். இந்த நேரம் மாறுபாடானது தற்செயலாக நிகழ்ந்தது. தற்பொழுது டெக்னீசியன் மூலம் இந்த clock error முற்றிலும் சரி செய்யப்பட்டு விட்டது.
பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் தவறு நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN