கட்டுமான பணியில் விபத்து - கட்டிடத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு
ஈரோடு, 25 ஏப்ரல் (ஹி.ச.) ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் பகுதியில் கொடுமுடியைச் சேர்ந்த செல்லப்பன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. மூன்றாவது தளத்திற்கு பணிகள் நடைபெற்ற நிலையில் இயந்திரம் மூலமாக கீழே
Two Construction Workers Dead


ஈரோடு, 25 ஏப்ரல் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் பகுதியில் கொடுமுடியைச் சேர்ந்த செல்லப்பன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது.

மூன்றாவது தளத்திற்கு பணிகள் நடைபெற்ற நிலையில் இயந்திரம் மூலமாக கீழே இருந்து மணல் எடுத்துச் செல்வதற்காக பிரத்தியேக இயந்திரம் பொருத்தும் பணியில் இன்று தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென இயந்திரம் முறையாக பொருத்தப்படாமல் இயங்கிய நிலையில் நிறுத்த முயன்ற போது பாரம் தாங்காமல் விழுந்தது. இதில் விளக்கேற்றி பகுதியை சேர்ந்த தேவராஜ், செவரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற இரண்டு கட்டிடத் தொழிலாளர்கள் மேல்தளத்தில் இருந்து தவறி விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கட்டிடத் தொழிலாளர் மாரியம்மாள் மற்றும் தேவராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b