திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.94.80 லட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் காணிக்கை
திருப்பதி, 26 ஏப்ரல் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவில்-இல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்து வருகிறது. தினசரி உண்டியல் கா
A


திருப்பதி, 26 ஏப்ரல் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவில்-இல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்து வருகிறது.

தினசரி உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூலாகிறது.

இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த பக்தர் எம். மகாதேவம்மா, 753 கிராம் எடையிலான 7 தங்க ஆபரணங்களை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கினார்.

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.94 லட்சத்து 80 ஆயிரம் என கூறப்படுகிறது.

இந்த தங்க ஆபரணங்கள் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவில் செயல் அலுவலர் முத்தாடா ரவிச்சந்திரா மற்றும் கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சவுத்ரி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA